ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் எழுந்துள்ள உள்வீட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ச களமிறங்கியுள்ளார். இதன்படி, நாளை திங்கள்கிழமை, ஆளுந்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளார்.
பொதுஜன பெரமுன அரசிலுள்ள பங்காளிக்கட்சிகளிற்கிடையிலும், பெரமுனவிற்குள்ளும் அண்மை நாட்களாக மோதல் வலுத்து வருகிறது. அரசல் புரசலாக இருந்த மோதல்கள், இப்பொழுது நடுத்தெருவுக்கு வந்து விட்டது.
இதையடுத்து, மஹிந்த ராஜபக்ச நாளை கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளார். ஆளுந்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் இதில் கலந்து கொள்கின்றன.
அலரி மாளிகையில் கூட்டம் நடக்கும்.
மேதின பேரணிகளை தனித்தனியாக கட்சிகள் நடத்த தயாராகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் சுமுகமான இணக்கப்பாடு ஒன்றை எட்டவும், மாகாணசபை தேர்தல் விவகாரம் உள்ளிட்ட ஏனைய சிக்கல்களும் ஆராயப்படவுள்ளது.