யாழில் யுவதிக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கி கூட்டு வல்லுறவு!

Date:

20 வயது யுவதிக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கி, கூட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

நேற்று (19) யுவதிக்கு மதுபானத்தை வலுக்கட்டாயமாக பருக்கிய ஒருவர், யுவதியை வல்லுறவுக்குள்ளாக்கி, இதை தொடர்ந்து, மற்றும் சிலராலும் யுவதி  கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஒருவராலேயே யுவதி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். யுவதியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தாயார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். யுவதியை மருத்துவப் பரிசோதனைக்காக பொலிசாரே அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், யுவதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தாயாரிடம் கூறி, அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று இரவு 8 மணிவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலோ, அச்சுவேலி, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைகளிலோ அனுமதிக்கப்படவில்லை.

இது பற்றி அறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பணிமனை, யுவதியை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்