முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, விமானப் பயணம் செய்யவிடாமல் திருப்பி அனுப்பிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொருவரின் வெளிநாட்டு பயணத் தடையை குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சரை தடுத்து நிறுத்தியது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இன்று (12) பிற்பகல் தெரிவித்தார்.
இது கணினி பிழையா அல்லது கடமையிலிருந்த அதிகாரியின் மேற்பார்வையில் நடந்ததா என மேலும் ஆராய்ந்து அதிகாரி தொடர்பில் உறுதியான முடிவுக்கு வரவுள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1