சுகாதார உத்தியோகத்தர்கள் பணிபகிஸ்கரிப்பு: பாதுகாப்பு ஊழியர்கள் பதில் கடமையாற்றினர்!

Date:

சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலையில்
பாதுகாப்பு ஊழியர்கள் சுகாதார ஊழியர்களின் பணியினையும் மேற்கொண்ட
சம்பவங்கள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்
காயமடைந்தவர்களை 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு சுகாதார தொழிற்சங்கங்களினால்
மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தினால் காயமடைந்தவர்களை
பொறுப்பேற்று சிகிச்சைக்காக அழைத்து செல்ல சுகாதார ஊழியர்கள்
காணப்படவில்லை.

இதனால் பாதுகாப்பு ஊழியர்களே குறித்த பணியினையும் இன்றைய
தினம் மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் வாகன விபத்தில் நான்கு பேர்
காயமடைந்தனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ்
வாகனம் பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும்
வளைவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த 4 பேர் விபத்துக்குள்ளாகியுள்ளாகி காயமடைந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...

பழைய பேருந்து பாதி வழியிலேயே நின்றது: பாடசாலை மாணவர்கள் நிர்க்கதி!

சேந்தாங்குளத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற இ.போ.ச பேருந்து பழுதடைந்ததால், யாழ்...

விபத்தில் பாடசாலை மாணவன் பலி

நேற்று (7) நோர்டன் பிரிட்ஜ் - ஹட்டன் பிரதான வீதியில் உள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்