இந்தியாவை 109 ரன்களில் சுருட்டியது அவுஸ்திரேலியா

Date:

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. முதல் நாளில் இரு அணிகளும் இணைந்து 265 ரன்கள் எடுத்துள்ளன. இன்றைய நாளில் 14 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இந்தச் சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் ரொஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இருந்தும் முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 109 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது இந்தியா. அதிகபட்சமாக கோலி 22 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி பேட்ஸ்மேன்கள் முறையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறினர். அவுஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனேமன், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த லபுஷேன் உடன் 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கவாஜா. லபுஷேன், 91 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். 60 ரன்கள் எடுத்த நிலையில் கவாஜா வெளியேறினார். பின்னதாக வந்த கப்டன் ஸ்மித், 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கேமரூன் கிரீன் களத்தில் உள்ளனர். ஆஸி. அணியின் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா கைப்பற்றி உள்ளார். முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது அவுஸ்திரேலியா.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்