ரக்வானாவில் சிறுவர் இல்லமொன்றில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சிறுவர் இல்ல காப்பாளரின் கணவர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
53 வயதான கிருஷ்ணசாமி சந்திரமோகன் என்ற சந்தேக நபர் ரக்வானா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கொடகவெல பிரதேச செயலாளருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இரத்தினபுரி பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியதையடுத்து இரத்தினபுரி சிறுவர் மற்றும் மகளிர் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு ரக்வான பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.




