27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

ஜனநாயகத்திற்கு எதிரான ரணிலின் நடவடிக்கைகளை முறியடிக்க ஒன்றிணையுங்கள்: பொதுமக்களிற்கு அழைப்பு!

உள்ளுராட்சி தேர்தலை பிரகடனப்படுத்துவது தொடர்பில் கருத்து தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தல் பிரகடனம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை நீதிமன்றில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு சட்டரீதியாக செயற்படாவிட்டால் ஜனாதிபதி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் ஜனாதிபதியின் கருத்து நாட்டின் சட்டம் அல்ல எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழு ஜனவரி 5 ஆம் திகதி தேர்தலை அறிவித்தது. தேர்தல் ஆணைக்குழுவினால் கட்டுப்பணம், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொண்டன. தேர்தல் திகதி ஜனவரி 21 அன்று அறிவிக்கப்பட்டது. தபால்மூல வாக்களிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வமானவை என்று தேர்தல் ஆணைக்குழு கூறுகிறது. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் தேர்தல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது உள்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாராளுமன்றத்தில் பொய் கூறினார்.

சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலை ஒத்திவைக்குமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கூறினார். அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“225 எம்.பி.க்களும் தேர்தலை ஒத்திவைக்குமாறு கடிதம் கொடுத்தாலும் தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுதான் முடிவு செய்ய முடியும்” என்றும் அவர் கூறினார்.

தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு, உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும், தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழியின்படி தேர்தலை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் மக்களின் வாக்குரிமைக்கு எதிரான ஜனாதிபதியின் நகர்வுகளை தோற்கடிக்க அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் மக்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என திஸாநாயக்க கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

Leave a Comment