சிவனொளிபாதமலை யாத்திரிகளை ஏற்றிய பேருந்து 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது: 2 பேர் பலி!

Date:

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் 100 அடி பள்ளத்துக்குள் விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 9.15 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.

காயமடைந்தவர்கள் கினிகத்தேன, வட்டவளை மற்றும் நாவலப்பிட்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவனொளிபாதமலைக்கு சென்றுவிட்டு திரும்பும் வேளையில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவம் மற்றும் பொலிஸ் குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டுள்ளதுடன், இருள் சூழ்ந்திருந்தமையினால் நோயாளர்களை மீட்பதில் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்