25.5 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இந்தியா

சிறையில் மனைவியுடன் தங்கியிருந்த எம்எல்ஏ – கையும் களவுமாக பிடித்தார் பெண் எஸ்பி

உ.பி.யில் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் முக்தார் அன்சாரி. இவர் சிறையில் இருந்தபடி பலமுறை சட்டப்பேரவை தேர்தலில் வென் றுள்ளார். முக்தார் மீது 30 வழக்குகள் உள்ளன. முக்தாரின் ரூ.400 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, கட்டிடங்களும் இடிக்கப்பட்டுள்ளன.

இவரது இரண்டு மகன்களில் மூத்தவரான அப்பாஸ் அன்சாரியும் (31) குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதி ஆவார். துப்பாக்கி சுடும் வீரரான இவர், தேசிய அளவிலானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அப்பாஸ் அன்சாரி, மாவ் தொகுதியில் பாரதிய சுஹல்தேவ் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏவாக உள்ளார். ஹவாலா வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாஸ் கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சித்ரகுட் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்பாஸின் மனைவி நிக்கத் பானு. இவர் தனது கணவர் அப்பாஸுடன் சித்ரகுட் சிறையில் பகலில் அன்றாடம் தங்கி வந்துள்ளார். நிக்கத்தின் வருகை சிறை பார்வையாளர் பதிவேட்டில் எழுதப்படவில்லை. இந்த சந்திப்புகள் சிறை கண்காணிப்பாளர் அசோக் சாகரின் அலுவலக அறையிலேயே நடை பெற்றுள்ளன. இந்த தகவல் வெளியில் கசியவே, சித்ரகுட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பிருந்தா சுக்லா இவர்களை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்.

இதற்காக சித்தரகுட் ஆட்சியர் அபிஷேக் ஆனந்துடன் ரகசியமாக தனியார் வாகனத்தில் வந்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது கைதி அப்பாஸின் அறை காலியாக இருந்தது. பிறகு சிறையின் அனைத்து அதிகாரிகளையும் தம்முடன் வந்த காவல் படையால் முடக்கியுள்ளார் எஸ்.பி. பிருந்தா. இதில் சிறை கண்காணிப்பாளர் அசோக்கின் அலுவலக அறை உள்பக்கம் தாழிட்டவாறு இருந்தது. இதனுள் கைதி அப்பாஸ் தனது மனைவி நிக்கத்துடன் சிக்கினார். அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளும் சிக்கியுள்ளன. விசாரணையில் அப்பாஸ் கடந்த ஒன்றரை மாதமாக மனைவி நிக்கத்துடன் அந்த அறையில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

இத்துடன் அப்பாஸ் தனது மனைவியின் கைப்பேசிகள் மூலம் தனது வழக்குகளின் சாட்சிகளையும் மிரட்டி வந்ததுடன், பணம் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்ட தாக புகார் உள்ளது. இவர்களை கையும் களவுமாக பிடித்த இளம் எஸ்.பி. பிருந்தா, வட இந்தியா முழுவதிலும் பிரபலமாகி பாராட்டை பெற்று வருகிறார்.

இதனிடையே, கைதி அப்பாஸுக்கு உதவியதாக சிறை அதிகாரிகள் எட்டு பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதி அப்பாஸை வேறு சிறைக்கு மாற்றி அவரது சிறை வழக்கு உ.பி. அதிரடிப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தனது கணவருடன் சிறையிலிருந்த நிகத் தற்போது சட்டப்படி அதனுள் கைதியாக உள்ளார்.

எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரியை சட்டவிரோதமாக சிறையில் சந்தித்ததாக அவரது மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து அப்பாஸ் அன்சாரியுடன் சேர்ந்து தலைமறைவாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நிகத் அன்சாரியிடம் இருந்து மொபைல் மற்றும் பிற ஆட்சேபனைக்குரிய பொருட்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அன்சாரியின் மனைவியிடமிருந்து சில சவுதி அரேபிய கரன்சிகளையும் போலீசார் மீட்டனர்.

அவர்களிடம் இருந்த இரண்டு கைப்பேசிகள், பல லட்சம் ரூபாய், தங்க நகைகள் சிக்கின.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

இன்ஸ்டா காதலால் விபரீதம்: நீரில் மூழ்கி 3 பேர் பலி!

Pagetamil

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

Leave a Comment