26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

தலதா மாளிகை பற்றி வதந்தி பரப்புவோரை கைது செய்யுங்கள்!

தலதா மாளிகை மற்றும் மகாநாயக்கர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரர், மல்வத்து பீடாதிபதி திப்பொடுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல ஆகியோர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில குழுக்கள் சமூக ஊடகங்கள் ஊடாக அடிப்படையற்ற மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களை பரப்பி வருவதாக பொலிஸ் மா அதிபருக்கும்,  அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி, தலதா மாளிகை மற்றும் மத வழிபாடுகளுக்கு பௌத்த மக்களின் நம்பிக்கை மற்றும் புனிதத்தன்மையை இழிவுபடுத்தும் மற்றும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

நாடளுமன்றத்துக்குள்ளும் தொடரும் அர்ச்சுனாவின் பரபரப்பு வித்தை: அநாகரிகமாக நடந்ததாக சபாநாயகரிடம் முறைப்பாடு!

Pagetamil

23 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment