26.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil
சினிமா

‘முகத்தை மூடி அந்தரங்க பாகத்தில் குத்தினார்’; லிவிங் டூகெதர் காதலன் சித்திரவதை: தமிழ் பட நடிகை கண்ணீர்க்கதை!

நடிகை ஃப்ளோரா சைனி தனது காதலரால் சித்திரவதைக்குள்ளான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். தனது முகத்தை மூடி, அந்தரங்க பாகத்தில் குத்தியதாகவும், படங்களில் நடிக்க தடைவிதித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஃப்ளோரா சைனி, ஸ்ட்ரீ, பிரேம கோசம் மற்றும் நரசிம்ம நாயுடு போன்ற தெலுங்குப்படங்களிலும், பல தமிழ் படங்களிலும் நடித்திருந்தார்.

விஜயகாந்தின் கஜேந்திரா, திண்டுக்கல் சாரதி, குஸ்தி உள்ளிட் தமிழ் படங்களில் நடித்தவர்.

அவர் அண்மையில் தனது இன்ஸ்டகிராமில் வெளியிட்ட வீடியோவில், பிரபல தயாரிப்பாளர் ஒருவருடனான தனது தவறான உறவைப் பற்றி பேசியுள்ளார்.

தனது முன்னாள் காதலன்-தயாரிப்பாளர் கவுரங் தோஷியுடனான14 மாத நீண்ட உறவில் தன்னை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக கூறியுள்ளார்.

ஃப்ளோரா 20 வயதிலிருந்தே தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிஅந்த வீடீயோவில் பேசினார்.

“நான் காதலித்தேன், அவர் ஒரு பிரபலமான தயாரிப்பாளர். ஆனால் விரைவில் விஷயங்கள் மாறியது. அவர் துஷ்பிரயோகம் செய்தார், அவர் என் முகத்தை மூடி, என் அந்தரங்க பாகங்களை குத்தினார். அவர் எனது தொலைபேசியை எடுத்து வைத்துக் கொண்டு, என்னை நடிப்பை கைவிடும்படி வற்புறுத்தினார். 14 மாதங்களாக, அவர் என்னை யாரிடமும் பேச விடவில்லை. ஒருநாள் மாலை வரை, அவர் என் வயிற்றில் குத்தினார், இந்த கொடுமை தாங்க முடியாமல் நான் ஓடிவிட்டேன், ”என்று அவர்  கூறினார்.

காலருடனான விலிங் டூ கெதர் வாழ்க்கையிலிருந்து வெளியேறி, தனது பெற்றோருடன் வாழத் திரும்பியதாகவும், அவர் அனுபவித்த அதிர்ச்சியிலிருந்து மீள நேரம் எடுத்ததாகவும் கூறினார்.

“மெதுவாக, நான் மிகவும் விரும்பிய விஷயத்திற்கு திரும்பினேன் – நடிப்பு. இது நேரம் எடுத்தது, ஆனால் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் அன்பைக் கூட கண்டேன், ”என்று ஃப்ளோரா மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

Leave a Comment