கொரோனா தொற்றினால் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். இதில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்.
நேற்று (14) இவர்கள் இருவரும் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 604ஆக உயர்ந்துள்ளது.
அந்த மரணங்களின் விபரங்கள் வருமாறு-
ஹிரிவடுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (14) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (14) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் உக்கிர குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.