Pagetamil
இலங்கை

மின் துண்டிக்கப்பட்டால் அறிவியுங்கள்

இலங்கை மின்சார சபையினால் அங்கீகரிக்கப்படாத மின்வெட்டுகள் ஏதும் விதிக்கப்பட்டால் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார பாவனையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புகார்களை எழுத்துப்பூர்வமாக அனுப்பலாம் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தனது கடிதத்தில், நிபந்தனை 30(10) இன் கீழ் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 2023 ஜனவரி 25 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்காக விடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 331,709 பரீட்சார்த்திகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்காது என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெல்லுக்கான உத்தரவாத விலை தேவை

east tamil

தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு

east tamil

மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை – பொலிஸ் தீர்மானம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

அர்ச்சுனாவை தகுதி நீக்கும் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Pagetamil

Leave a Comment