25.1 C
Jaffna
January 8, 2025
Pagetamil
கிழக்கு

அக்கரைப்பற்று பாடசாலை சர்ச்சை : போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடாக பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது- அக்கரைப்பற்று தவிசாளர் விளக்கம்!

1987/15ம் இலக்க பிரதேச சபை சட்டம் 19 ஆ வின் படி “பிரதேச சபை இடப்பரப்பில் உள்ள பாடசாலைகளை திறத்தல், மூடுதல், ஒன்றிணைத்தல், பெயர் சூட்டல், தரம் உயர்த்தல் என்பன பற்றி தோதான அதிகாரிகளுக்கு விதப்புரை செய்யும் அதிகாரம்” எங்களுக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறியே லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம் என்ற பெயரை அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் என்று மாற்றியுள்ளார்கள். கிழக்கு மாகாண கல்விப்பணிமனையினர் கருவாட்டுக்கூடைக்கும், கஜூ, பெற்றோல் போன்ற பொருட்களுக்கும் சோரம் போகி இந்த விடயத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஒருபக்கமாக மாகாண கல்வியதிகாரிகள் செயற்பட்டுள்ளார்கள். இதுவிடயமாக பல தடவைகள் பேசியிருந்தும், நடவடிக்கை எடுக்க கோரியிருந்தும் முறையான பொறுப்புகூறல்களோ அல்லது பதில்களோ இல்லாமல் அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையினரும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் உத்தரவு என்று கூறி கண்களை மூடிக்கொண்டு செயற்படுகிறார்கள் என அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளரும், தேசிய காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. றாஸிக் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், பள்ளிக்குடியிருப்பு ஜும்மாப்பள்ளிவாசல் செயலாளருமான அபூஸாலி இல்யாஸ் ஆகியோர் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலய பெயர்மாற்றம் மற்றும் பல சர்ச்சைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கரைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அக்கரைப்பற்று தவிசாளரின் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் முக்கியஸ்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் அந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் சனத்தொகை பரம்பலுடன் ஒப்பிடுகையில் தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும் கூட தலைவர் அஷ்ரபின் பெயரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டமையினால் அதனை நாங்கள் பொருந்திக்கொண்டோம். இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்த பாடசாலை உருவாக்கப்பட்ட போது லீடர் அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம் என்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் அப்பாடசாலையின் ஸ்தாபகர் என்று கூறப்படுபவரால் அவரது சிரேஷ்ட புதல்வியின் பெயரான ஸபா என்கின்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

திருட்டுத்தனமாக ஆவணங்களை தயாரித்து போலியான ஆவண சமர்ப்பிப்புக்களை கல்வி அமைச்சின் காரியாலயங்களுக்கு வழங்கி பாடசாலையின் பெயரை மாற்றியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சேர் றாஸிக் பரீட், பதியுதீன் மஹ்மூத் போன்ற கிழக்கு வெளியே இருந்த முஸ்லிம் அரசியல்தலைவர்களை கௌரவித்த நாங்கள் கிழக்கில் பிறந்து முழு தேசத்திற்கும் தலைமை கொடுத்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் பெயரில் பாடசாலை வைத்திருக்க விரும்புவது தவறா? பிரதேச செயலக அதிகாரிகளின் உதவியுடன் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு உரிய காணியை பாடசாலைக்கு பெயர் மாற்றியுள்ளதாக அறிகின்றோம். மட்டுமின்றி அந்த பாடசாலையின் ஸ்தாபகராக கூறிக்கொள்பவர் தனது மூத்த மக்களின் பெயரை பாடசாலைக்கும், கட்டிடங்களுக்கு தனது ஏனைய மக்களின் பெயரையும் வைத்துக்கொண்டு அடாத்தாக பாடசாலையை நிர்வகிக்கிறார். இது அப்பாடசாலை அதிபருக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா எம்.பி கல்வி மேம்பாட்டுக்கு செய்த வேலைத் திட்டங்களை எல்லோரும் அறிவர். 90 மாணவர்கள் மட்டுமே உள்ள இப்பாடசாலைக்கு 14 ஆசிரியர்கள், 03 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 02 சிற்றூழியர்கள், நிறைய பௌதீக வளங்களை போன்றவற்றை கல்வி உயரதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனால் அண்மையில் உள்ள ஏனைய பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றது. இந்த முறைகேடான வளப்பங்கீடுகள் தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அரச உயர்மட்டங்களுக்கு இந்த பிரச்சினையை கொண்டுசெல்ல தயாராகிவருகின்றோம்

இந்த பாடசாலை உருவாக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்தும் அவரேதான் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்துவருகிறார். இது கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கும், சட்டத்திற்கும் முரணானது. இவரது போலியான ஆவணங்கள், அடாத்தான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகவலறியும் சட்டத்தின் மூலம் ஆவணங்களை சேகரித்துள்ளோம். இது விடயமாக பலதடவைகள் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் தலைவர் அதாஉல்லாவும், நாங்களும் பேசியிருக்கிறோம் என்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

கேரளா கஞ்சாவுடன் 34 வயதுடைய சந்தேக நபர் கைது

Pagetamil

Leave a Comment