சிம்புவின் ‘பத்து தல’ வெளியீட்டு திகதி அறிவிப்பு!

Date:

சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘பத்து தல’. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ மல்லூரி, கலையரசன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டில் நடைபெற்றது. படம் டிசம்பர் 14ஆம் திகதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட திகதியில் வெளியாகாமல் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘பத்து தல’ 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

Update – மின்விசிறி வயரால் பறிபோன ஒரே குடும்பத்தின் 4 உயிர்கள் – உறக்கத்திலேயே நடந்த சோகம்!

கடுவெல நகரில் இடம்பெற்ற கோரச் சம்பவம் – தாய், தந்தை மற்றும்...

மஸ்கெலியா பாடசாலையில் 35 மாணவர்கள் திடீர் சுகவீனம் – ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா புனித ஜோசப் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் கல்வி பயிலும்...

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்