தென்மராட்சி, அல்லாரை, அறுகம்புலவு பிள்ளையார் கோயிலை உடைத்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.
நேற்று (25) நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது.
ஆலயத்தை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் பிள்ளையார் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச்சங்கிலி, ஐம்பொன்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தென்மராட்சியின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக கோயில்கள் உடைத்து திருடப்படும் சம்பவங்களும், கால்நடைகள் திருடப்படும் சம்பவங்களும் என்றுமில்லாதளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




