தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் பத்தேகம இடையே 73/1 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் சரக்கு லொறியொன்றும் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் எட்டு பேர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கும் நால்வர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி நுகர்வுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியொன்றும், அதே முனையில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1