25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

ஒரு உருவம்… பல ரூபங்கள்: இவரைப்பற்றி தகவல் கொடுத்தால் 1 மில்லியன் ரூபா பரிசு!

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இந்த நபர் தன்னை வைத்தியர், பொறியியலாளர், ஆசிரியர், வர்த்தகர் என இனம்காட்டிக்கொண்டு, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தன்னை வைத்தியராக அடையாளப்படுத்திக்கொண்டு, கொள்ளையடிக்கப்பட்ட வாகனமொன்றை 165 இலட்சத்துக்கு விற்றமை, போலி கையெழுத்தைப் பயன்படுத்தி 1,550,000 ரூபாய் பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டமை, 30 இலட்சம் பெறுமதியான வானை கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் மேலும் பல மோசடிகளில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ள பொலிஸார், இவரைக் கைதுசெய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபரின் பெயர் ராசிக் மொஹமட் பாருக் என்பதுடன், இவர் இலக்கம்.122/15 பி மாங்கட வீதி, கடவத்த, 133/05 நாமல் டெரன்ஸ், வட்டியகொட, 89/03 ரஜமாவத்த, கனுவன, ஜாஎல ஆகிய முகவரிகளைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இவரைக் கண்டுபிடித்துகக் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் ரூபாயை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே இவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், 071- 8592604, 0112-2685958 ஆகிய ​தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

‘எலிக்காய்ச்சல் வந்து சாவாய்’: யாழில் நிதி கொடுக்க மறுத்தவர்களை சபித்த மதபோதகர்!

Pagetamil

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனையுடன் விடுதலை

east tamil

சுண்ணாம்புக்கல் அகழ்வில் சட்டவிரோத செயற்பாடுகள் யாவும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

Pagetamil

பிரபல தவில் வித்துவான் மகன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment