முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட செல்வபுரம் கிடாய்பிடிய்த்த குளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் நட்டாங்கண்டல் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்படுள்ளார்.
நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழு குறித்த கைது நடவடிக்கையில் நேற்று (16) ஈடுபட்டிருந்தது
இதன்போது நால்வர் தப்பி சென்றுள்ளதுடன், ஒருவர் கைது மாங்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையின் போது கனரக வாகனம் மற்றும் இரு மோட்டர் வண்டிகள் மற்றும் புதையல் தோண்ட பயன்படுத்தி பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1