மன்னார் பிரதான பாலத்தில் விபத்து-இருவர் காயம்

Date:

மன்னார் பிரதான பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் வீதி ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வீதியோர தடுப்பு கல்லில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

தள்ளாடி பகுதியில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் நகர போக்குவரத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் 'ஐஸ்'...

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசியா நாட்டு பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு அம்பிளாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசியா பிரஜையான...

ராஜாங்கன சத்தாரத்ன விளக்கமறியலில்

அனுராதபுர பிரதம நீதவான் சியாபத் சசிந்து விக்ரமரத்ன, பௌத்த துறவற அமைப்பிலிருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்