பாடசாலை ஆசிரியை ஒருவர் பகலில் மாணவர்களிற்கு கற்பிப்பதுடன், இரவில் நிர்வாண புகைப்படங்கள் எடுத்து வயது வந்தோருக்கான தளங்களில் வெளியிடுவதை மாணவர்கள் கண்டுபிடித்ததையடுத்து. பணியிலிருந்து விலகியுள்ளார்.
ஸ்கொட்லாந்தில் உள்ள பேனர்மேன் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்டி புச்சன். பல ஆண்டுகளாக ஆசிரியையாக உள்ளார்.
ஆனால், இரவு நேரங்களில் வேறு வேலைகளைச் செய்து கொண்டு, அதை மாணவர்கள் கண்டுபிடிக்காமல் கவனமாக இருந்தார்.
அதாவது, அவர் தினமும் நள்ளிரவு வரை உழைத்தார். இரவில் தனது நிர்வாண புகைப்படங்களை ஒன்லி பான்ஸ் என்ற வயதுவந்தவர்களிற்கான ஆபாச இணையதளத்தில் வெளியிட்டு வந்தார்.
இணையதளத்தில் பதிவிடுவதற்கான புகைப்படங்களிற்கான ஷூட்களை இரவில் செய்வது வழக்கம். இப்படிச் செய்வதால் அவருக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வந்தது. சில வருடங்களாக தனது ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இருந்தாலும் காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையல்லவா. அண்மையில் ஒருநாள், இயற்பியல் ஆசிரியரின் ஆபாசப் புகைப்படங்களை ஒரு மாணவர் பார்த்துள்ளார். அவர் சக மாணவர்களிடம் கூற, பாடசாலை முழுவதும் தகவல் பரவியது.
இதையடுத்து, அவரை பாடசாலை ஒழுங்குக் குழு விசாரணைக்கு வருமாறு கூறியது. இதையடுத்து, கிறிஸ்டி புச்சன் தனது ஆசிரியை வேலையை இராஜினாமா செய்தார்.
இருப்பினும், தனது செயலை இயற்பியல் ஆசிரியரான கிறிஸ்டி புச்சன் நியாயப்படுத்தியுள்ளார்.
அவருக்கு ஒரு மகன் (11) உள்ளார். அவரை ஆதரிக்க போதிய பணம் இல்லாததால் தான் இந்த வேலையை செய்து வருவதாக கூறினார். தன் மகனுக்கு தீராத நோய்கள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
இப்படி நிர்வாணப் படங்களை வெளியிட்டு மாதம் ஆயிரக்கணக்கான டொலர்கள் சம்பாதிப்பதாக கூறியுள்ளார்.
பணத்திற்காக மட்டுமே இந்த வேலையை செய்கிறேன் என்றார். அதைச் செய்ததற்காக பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும், தன் மகனுக்கு சரியானதைச் செய்கிறேன் என்றார்.