31.9 C
Jaffna
April 28, 2024
சினிமா

நடிகர் தனுஷ் வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய கீழமை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

நடிகர் தனுஷூக்கு எதிரான போலி ஆவண வழக்கின் ஆவணங்களை தாக்கல் செய்ய கீழமை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனு. நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரிய வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார்.

வாரிசு வழக்கில் நடிகர் தனுஷ், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் என்ற முடிவுக்கு உயர் நீதிமன்றம் வரவில்லை. தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷின் பிறப்புச் சான்றிதழின் உண்மை தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றம் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 13ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காதலரை பிரிந்தார் ஸ்ருதிஹாசன்

Pagetamil

“வரிகள் இல்லை எனில் பாடல் இல்லை” – இளையராஜா மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

Pagetamil

அசோக் செல்வனின் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ டீசர்

Pagetamil

‘கும்முனு இருந்ததால் பார்த்ததும் மூட் வந்து விட்டது’: பின்னால் வந்து பிடித்த இயக்குனர்: நடிகை அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

லோகேஷ் கனகராஜ் – ரஜினியின் ‘கூலி’ பட அறிவிப்பு

Pagetamil

Leave a Comment