இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று பகல் கைவிடப்பட்டுள்ளது.
சற்று முன்பிலிருந்து இ.போ.ச பேருந்து சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
இ.போ.ச ஊழியர் ஒருவர் சேவையிலிருந்த போது, தனியார் பேருந்து துறையினரால் கத்திக்குத்திற்கு இலக்காகியிருந்தார். இதையடுத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நேற்று காலை முதல் யாழ் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிற்சங்கமொன்றின் செயலாளர் இன்று பகல் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, பணிப்புறக்கணிப்பை தொழிற்சங்கங்கள் கைவிட்டு, தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1