வாக்குவங்கிக்கான புலிப்பூச்சாண்டி காட்டும் ராஜபக்சக்களின் உத்தியே மணி கைது: முன்னாள் எம்.பி சரா!

Date:

பெரும்­பான்­மை­யின மக்­கள் மத்­தி­யில் சரிந்து செல்­லும் தனது செல்­வாக்கை மீட்­ப­தற்­கான கோத்­தா­பய அர­சின் திட்­டமே யாழ்ப்­பா­ணம் மாந­கர மேய­ரின் கைது. புலிப் பூச்­சாண்டி காட்டி தங்­கள் வாக்கு வங்­கி­யைக் கட்­டி­யெ­ழுப்­பும் ராஜ­பக்­சக்­க­ளின் வழ­மை­யான உத்­தியே இது. தங்­கள் அர­சி­யல் நல­னுக்­காக தமிழ் மக்­களை இவ்­வாறு அடக்கி ஒடுக்­கும் செயற்­பாட்டை அரசு நிறுத்த வேண்­டும்.
இவ்­வாறு தெரி­வித்­தார், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற முன்­னாள் உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முக்­கி­யஸ்­த­ரு­மான ஈ.சர­வ­ண­ப­வன்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர முதல்­வர் வி.மணி­வண்­ணன் பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் பிரி­வி­ன­ரால் நேற்று அதி­காலை கைது­செய்­யப்­பட்­டார். இது தொடர்­பில் விடுத்­துள்ள கண்­டன அறிக்­கை­யி­லேயே ஈ.சர­வ­ண­ப­வன் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

அந்த அறிக்­கை­யில் மேலும் உள்­ள­தா­வது-;
.
தமி­ழர் தரப்­பில் உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர்­கள் எவ­ரும் இது­வரை பிர­யோ­கிக்­காத ஓர் அதி­கா­ரத்தை – அதை விரி­வாக பொருள்­கோ­டல் செய்து வி.மணி­வண்­ணன் முதற்­த­ட­வை­யா­கப் பிர­யோ­கித்­துள்­ளார். அது சிங்­கள தேசத்தை கிலி­கொள்­ளச் செய்­து­விட்­டது. அவர்­க­ளுக்கு சீரு­டையோ, அதன் நிறமோ பிரச்­சி­னை­யல்ல. அதி­கா­ரப் பிர­யோ­கிப்பை ஆட்­சி­யா­ளர்­க­ளால் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை.

அர­சுக்­குத் தெற்­கில் தேய்ந்து செல்­லும் தங்­கள் வாக்கு வங்­கியை தூக்கி நிறுத்த வேண்­டும். மாகாண சபைத் தேர்­தலை இப்­போது நடத்­தி­னால் அவர்­கள் படு­தோல்­வி­யைச் சந்­திக்க நேரும். அத­னால் தங்­கள் வழ­மை­யான உத்­தியை இப்­போ­தும் ஆரம்­பித்­து­விட்­ட­னர்.

போரில் வென்­றோம் என்று கூறி 2010ஆம் ஆண்டு பெரும்­பான்­மை­யின வாக்­கு­க­ளைப் பெற்­ற­னர். ஈஸ்­டர் தாக்­கு­தலை முன்­னி­றுத்தி 2019ஆம் ஆண்டு தேர்­த­லில் வென்­றார்­கள். இப்­போது தங்­கள் வாக்கு வங்­கியை அதி­க­ரிக்க மீண்­டும் புலிப் பூச்­சாண்­டி­யைக் கையில் எடுத்­தி­ருக்­கி­றார்­கள்.

மாற்­றுக் கருத்­தா­ளர்­கள், தமிழ்த் தேசி­யச் செயற்­பாட்­டா­ளர்­கள், ஊட­கங்­கள் என அனை­வ­ரை­யும் அடக்கி ஒடுக்­கவே இப்­போ­தைய அரசு விரும்­பு­கின்­றது. ஊட­கங்­கள் மீதான வழக்­கு­கள், நகர மேயர் கைது என்று இந்த அர­சின் அடக்கு­ முறைப் போக்கு நீள்­கின்­றது. தமிழ் மக்­கள் நிம்­ம­தி­யாக மூச்சு விடக்­கூ­டாது என்­ப­து­தான் அவர்­க­ளின் சிந்­த­னை­யா­க­வுள்­ளது.

தங்­க­ளின் இந்த நோக்­கத்­துக்­காக, உலக நாடு­க­ளால் மிக மோச­மான சட்­டம் என்று சொல்­லப்­ப­டும் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை அரசு கையில் எடுத்­தி­ருக்­கின்­றது. இந்­தச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்க வேண்­டும் என்று பல நாடு­கள் வலி­யு­றுத்­தும் நிலை­யில், தற்­போ­தைய அரசு தொடர்ந்­தும் இந்­தச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களை ஒடுக்க முயல்­கின்­றது. அர­சின் இந்­தப் போக்கை நிறுத்­து­வ­தற்கு சர்­வ­தேச நாடு­கள் கடும் அழுத்­தம் கொடுக்க வேண்­டும் என்­பது தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்ப்பு.

இப்­ப­டி­யான மிரட்­டல்­கள், அச்­சு­றுத்­தல்­கள், உயிர்க் கொலை­க­ளைக் கண்டு அடங்­கி­யி­ருந்து இருந்­தால் இப்­போது இந்­தத் தீவில் தமி­ழர்­கள் என்ற இனமே இருந்­தி­ருக்­காது. அரா­ஜக அடக்கு­ முறை­க­ளுக்கு எதி­ராக நாம் அனை­வ­ரும் தமி­ழர்­க­ளாக ஒன்­றி­ணைந்து குரல் கொடுப்­போம் என்­றுள்­ளது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு செருப்பு மாலை!

யாழ் மாவட்ட ஊசி எம்.பி அர்ச்சுனாவின் படத்திற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது....

இளம்பெண்ணிடம் ஈவ்டீசிங்: தவெக ஒன்றிய செயலாளர் கைது​

திரு​வாரூர் புதிய பேருந்து நிலை​யத்​தில் இளம் பெண்​ணிடம் ஈவ்​டீசிங் செய்த தவெக...

எரிபொருள் இறக்குமதி செலவு குறைகிறது!

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உச்சத்தை எட்டிய எரிபொருள் இறக்குமதி செலவுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்