பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டது குறித்து தனது சொந்த விசாரணையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா, இஸ்ரேலிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக பல இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் அடையாளம் தெரியாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
திங்களன்று Axios இன் அறிக்கையின்படி, அமெரிக்க நீதித்துறை இஸ்ரேலில் உள்ள அதன் பிரதிநிதியிடம் FBI இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
மே மாதம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில், அபு அக்லே இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான அல் ஜசீரா நிருபர் ஒரு அமெரிக்க பிரஜை
அமெரிக்க விசாரணையின் நோக்கம் மற்றும் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பது தெளிவாக இல்லை.
ஆனால் அபு அக்லேவின் கொலை தொடர்பான வெளி விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்காது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் கூறினார். “ஷிரீன் அபு அக்லேவின் துயர மரணம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க நீதித்துறை எடுத்த முடிவு தவறு” என்று காண்ட்ஸ் ருவிட்டரில் எழுதினார்.
“[இஸ்ரேலிய இராணுவத்தின்] வீரர்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம், வெளி விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம், உள் விசாரணையில் தலையிட மாட்டோம் என்று அமெரிக்க பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை வழங்கியுள்ளேன்” என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
முன்னாள் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரும் வலதுசாரி கூட்டணிக்கு இஸ்ரேலிய வாக்காளர்கள் ஆதரவளித்த இரண்டு வாரங்களுக்குள் திங்களன்று அறிக்கைகள் வந்துள்ளன.