செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் களுத்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை-வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
களுத்துறை-வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




