பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யலாம்!

Date:

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘ஜெயிலர் 2’ ட்ரெய்லர் எப்படி? – முத்துவேல் பாண்டியனின் அதகளம்

ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி...

மேடையில் பிடுங்குப்பட்ட தற்குறிகள்!

திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல்...

மீண்டும் சிறை திரும்பினார் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்