25.6 C
Jaffna
January 10, 2025
Pagetamil
கிழக்கு

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த நபர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த சனிக்கிழமை(5) இரவு பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்மனார் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் மருதமுனை 2 பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 4 கிராம் 350 மில்லிகிராம் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) பொலிஸ் கன்டபிள்களான கண்டப்பகல (75492) பிரேமதாச ( 35808) நிமேஸ்(90699) சாரதி குணபால (19401) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

-பாரூக் சிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர் நியமனம்

east tamil

தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

east tamil

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

east tamil

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு

east tamil

Leave a Comment