இரகசிய காதல் நிறைவேறியது: இரண்டு நாட்டு அழகிகள் திருமணம்!

Date:

மிஸ் அர்ஜென்டினாவாக தெரிவான அழகியும், மிஸ் போர்ட்டோ ரிக்கோவாக தெரிவான அழகியும் இரண்டு வருட இரகசிய காதலைத் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.

அர்ஜென்டினாவின் முன்னாள் அழகி மரியானா வரேலா (26), மற்றும் போர்ட்டோ ரிக்கோ அழகி ஃபேபியோலா வாலண்டின் (22) ஆகியோரோ இன்ஸ்டாகிராமில் இந்த திருமண செய்தியை வெளிப்படுத்தினர்.

மரியானா 2019 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அர்ஜென்டினாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்

ஃபேபியோலா 2020 இல் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் பங்கேற்றார்

இந்த ஜோடி தங்கள் காதல் திட்டம், திருமணம் மற்றும் தேனிலவு படங்களைப் பகிர்ந்துள்ளனர்

இரண்டு அழகிகளும் ஒக்டோபர் 28 அன்று திருமணம் செய்து புகைப்படங்களை ஒன்லைனில் பகிர்ந்து கொண்டனர்.

அர்ஜென்டினா 2010 இல் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது, போர்ட்டோ ரிக்கோ 2015 இல் சட்டப்பூர்வமாக்கியது.

மரியானா 2019 மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அர்ஜென்டினாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர், மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 இன் முதல் 10 இடங்களுக்குள் வந்தார். அங்கு அவர் தனது வருங்கால மனைவியைச் சந்தித்தார்.

போர்ட்டோ ரிக்கோவை பிரதிநிதித்துவப்படுத்திய ஃபேபியோலா அந்த ஆண்டு மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் போட்டியின் இறுதி 10 போட்டியாளர்களிற்குள் வந்தார்.

spot_imgspot_img

More like this
Related

‘மென்மையான தண்டனை வழங்குங்கள் என கேட்க வெட்கப்படுகிறேன்’: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகள் நீதிமன்றத்தில் கூறியவை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்...

யாழ்ப்பாண ஐயா, மலையகத்தில் செய்த மோசடி வேலை!

நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக நுவரெலியா பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இருவரை...

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்