Pagetamil
இலங்கை

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதிய நபர் உயிரிழப்பு!

கடந்த மாதம் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி குருநாகல்-புத்தளம் வீதியை அண்டிய சுற்றுவட்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை காயமடைந்துள்ளார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகனத்தில் இருந்தார். சாரதி, பாதிக்கப்பட்ட நபர் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சாரதி மீண்டும் கைது செய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

east tamil

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

east tamil

750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

east tamil

இனவாத அரசியலின் பிரதிபலிப்பு: ஜேவிபியின் முகத்தை வெளிப்படுத்தும் கஜேந்திரகுமார்

east tamil

வறுமை கல்விக்கு தடையாக அமையக்கூடாது – வடக்கு ஆளுநர்

east tamil

Leave a Comment