28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

பாணின் விலைகள் குறையலாம்!

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாண் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் திருத்துவது குறித்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் பரிசீலித்து வருகிறது.

பிரதிநிதிகள் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

​​கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

ஊடகங்களில் குறிப்பிடப்படும் விலைகளுக்கு கோதுமை மா கிடைக்காவிட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 320 ரூபாவிலிருந்து 298 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தன கூறினார்.

அதன்படி, பாண் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைகள் இன்று அல்லது நாளை முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கூறுகையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் உலக சந்தை விலைகள் தளர்த்தப்படுவதால் விலைகள் மேலும் குறையலாம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

Leave a Comment