உலகில் பிரச்சனைகளே இல்லாத மனிதர்கள் இருக்க முடியாது. மனிதர்களிற்கு ஏதாவதொரு பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். அப்படித்தான், அமெரிக்காவை சேர்ந்த ஜோனா ஃபால்கன் என்ற 52 வயது நபருக்கும் ஒரு பிரச்சனை உள்ளது.
இது சற்று விவகாரமான பிரச்சனை.
‘உலகின் மிகப் பெரிய ஆண்குறி’க்கு தானே சொந்தக்காரர் என ஜோனா ஃபால்கன் உரிமை கோரி வருகிறார். இந்த பெருமையால் கிடைக்கும் சிக்கல்கள்தான் அவரது பெரிய பிரச்சனை.
தனது பெரிய உறுப்பினால் தான் சந்தித்த சில வினோதமான போராட்டங்கள், சிக்கல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்தவர். ஜோனா ஃபால்கன். அவரது ஆணுறுப்பு சாதாரண நிலையில் 8 அங்குல நீளமும், உறைத்திருக்கும் போது 13.5 அங்குல நீளமும் இருக்கும் – இது சராசரி ஆண்குறி நீளத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இப்போது நடிகராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணிபுரியும் ஜோனாவுக்கு அவரது பிறப்புறுப்பின் அளவு ஒரு பெரிய தொழிலைத் தொடங்க உதவியிருந்தாலும், இது பல மோசமான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்தது. அவரது அன்றாட வாழ்க்கையை எதிர்மறையாக பாதித்துள்ளது என்றார்.
அவர் சமீபத்தில் NeedToKnow.online இல் கூறுகையில், மனக்கிளர்ச்சியான நேரங்களில் உறுப்பின் வீக்கம் காரணமாக படுக்கையறையில் சிரமப்படுவதாக தெரிவித்தார்.
“மறைநிலையில்” செல்ல நான் பேக்கி அல்லது ப்ளீட்டட் பேண்ட்டை அணிவேன்“ என்றார்.
‘சில காரணங்களால், வாய்வழி உடலுறவு கொள்ள முடியாத அளவுக்கு அது தடிமனாகிவிட்டது, உடலுறவுக்கு மிக மெதுவாக நுழைவது தேவைப்படுகிறது என்றார்.
‘முற்றிலும் முழுமையாக நிமிர்ந்து நிற்பது கடினமானது – இது வயதின் செயல்பாடாகவும் இருக்கலாம்.’ என்றார்.
ஜோனா முதன்முதலில் 1999 இல் புகழ் பெற்றார். அவர் பிரைவேட் டிக்ஸ்: மென் எக்ஸ்போஸ்டு என்ற HBO ஆவணப்படத்தில் தோன்றி, உலகிலேயே மிகப்பெரிய ஆண்குறி தன்னிடம் இருப்பதாகக் அறிவித்தார்.
பல ஆண்டுகளாக, அவர் தனது பெரிய உறுப்பைப் பற்றி விவாதிக்க பல நிகழ்ச்சிகளில் தோன்றினார். இருப்பினும், அவரது கூற்று சரியானதா என இன்னும் சரிபார்க்கப்படவில்லை.
அவர் இப்போது டாக்கின் யாங்கீஸ் என்ற MNN நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
அவர் இருபால் உறவு கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆண்களும் பெண்களும் சில சமயங்களில் தனது பிறப்புறுப்புக்காக மட்டுமே ஆர்வமாக இருப்பதே பெரிய ஆணுறுப்பைக் கொண்டிருப்பதன் மற்றொரு குறைபாடாகும். இது பல முறை நடந்துள்ளது என்று கூறினார்.
ஹெல்த்லைனின் கூற்றுப்படி, சராசரி ஆண்குறியின் அளவு 5.1 அங்குலங்கள் மற்றும் விறைப்பு 5.5 அங்குலங்கள் வரை இருக்கும், அதே சமயம் மந்தமான ஆண்குறியின் சராசரி நீளம் 3.6 அங்குலங்கள் ஆகும்.
தற்போது தனிமையில் இருக்கும் ஜோனா, சிறு வயதிலிருந்தே தனது அபரிமிதமான ஆண்குறியின் அளவு காரணமாக தனது வகுப்பு தோழர்களின் கவனத்தை ஈர்ப்பதாகக் கூறினார்.
“நான் 10 வயதில் ஏற்கனவே நான்கு அங்குலங்களுக்கு மேல் உறுப்பின் நீளமிருந்தது. அதனால் நான் தங்குமிடப் பள்ளியில் மற்ற மாணவர்களின் கவனத்தை ஈர்த்தேன்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
ஜோனா சமீபத்தில் LAX விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரால் நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.
அவர்கள் தனது காற்சட்டைக்குள் ஒரு ‘மாபெரும், விவரிக்க முடியாத வீக்கம்’ இருப்பதைக் கவனித்த பிறகு, அது வேறு ஏதோ என்று நினைத்தார்கள் என கூறி, சிரித்தார்.
”அவர்கள் என்னைப் பரிசோதித்து, “எல்லாமே இயற்கையானது” என்பதை உறுதிப்படுத்தினர்.’ என்றார்.
அவர் இறந்த பிறகு தனது ஆண்குறியை ஐஸ்லாந்திய பல்லாலஜிகல் அருங்காட்சியகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக அவர் முன்பு தெரிவித்திருந்தார்.