25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

இந்தியாவிலிருந்து திரும்பி வந்தவர்களிற்கான நடமாடும் சேவை

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் திங்கட்கிழமை(31) காலை 8.30 மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, பிரஜாவுரிமை சான்றிதழ் பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களுக்கான காணித்தேவை மற்றும் காணி உரிமை பிரச்சினைகள் தொடர்பானவை, வன்முறையால் பாதிக்கப்பட்ட சொத்து மற்றும் உயிரிழப்பு காயத்திற்கான நட்டஈடு பெற்றுக் கொள்ளல் தொடர்பானவை, தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளல், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினூடாக ஏற்கனவே அனுப்பப்பட்ட கோவைகளை பூரணப்படுத்தல் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் சேவையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், இழப்பீட்டுக்கான அலுவலகம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகிய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் பங்குபற்ற உள்ளன.

நடமாடும் சேவை தொடர்பாக தேவையான விடயங்களை தங்கள் பிரதேச செயலகங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

Leave a Comment