தலைமுறை தலைமுறையாக எப்பொழுதும் நம் ஆர்வத்தைத் தூண்டும் வானத்தில் உள்ள அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) மற்றும் வேற்றுகிரகவாசிகளின் பின்னால் உள்ள மர்மத்தை கண்டறிய நாசா ஒரு திட்டத்தை வகுத்துள்ளது.
வானத்தில் புதைந்திருக்கும் இந்த மர்மமான பொருள்கள் மற்றும் அவற்றிலிருந்து உருவாகும் கதைகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படை உண்மையைக் கண்டறிய, நாசா 16 பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது.
வான்வெளி மர்மங்கள் பற்றிய பதில்களைக் கண்டுபிடிக்க இந்த குழு முயற்சிக்கும்.
நாசா ட்விட்டரில் இந்த புதிய திட்டத்தை அறிவித்தது: “அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (யுஏபி) அல்லது விமானம் அல்லது அறியப்பட்ட இயற்கை நிகழ்வுகள் என அடையாளம் காண முடியாத வானத்தில் உள்ள அவதானிப்புகள் குறித்த சுயாதீன ஆய்வுக் குழுவில் பங்கேற்க 16 நபர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். ஒன்பது மாத ஆய்வு ஒக்ரோபர் 24ல் தொடங்கும்,” என குறிப்பிட்டுள்ளது.
We’ve selected 16 individuals to participate in an independent study team on unidentified aerial phenomena (UAP), or observations in the sky that cannot be identified as aircraft or known natural phenomena. The nine-month study will begin on Oct. 24: https://t.co/RsVP4kggwd pic.twitter.com/OQ5XecW0Ai
— NASA (@NASA) October 21, 2022
குழுவின் கண்டுபிடிப்புகள் அடங்கிய முழு அறிக்கை 2023 ஆம் ஆண்டின் மத்தியில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.