கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர் புகையிரதமட மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை(15) இரவு 7.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த கந்தக்குட்டி சுந்தரம் (67) என்பவராவார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி தபால் புகையிரதம் சென்ற போது விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1