கிளப் அணிக்காக 700வது கோலை பதிவு செய்த ரொனால்டோ

Date:

நடப்பு ப்ரீமியர் லீக் கால்பந்தாட்ட சீசனில் தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார் ரொனால்டோ. கிளப் அணிக்காக அவர் பதிவு செய்த 700வது கோல் ஆக இது அமைந்துள்ளது.

சரியாக கடந்த 20 ஆண்டுகள் 2 தினங்களுக்கு முன்னர் அவர் கிளப் அணிக்காக முதன்முதலில் கோல் பதிவு செய்திருந்தார். அவரது இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

போர்ச்சுகல் நாட்டு கால்பந்தாட்ட வீரரும், மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணியில் விளையாடி வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்தாட்ட உலகிலேயே அதிக கோல்களைப் பதிவு செய்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 37 வயதான அவர் வசம் நிறைய சாதனைகள் உள்ளன. அதோடு பல மைல்கற்களுக்கு அவர் சொந்தக்காரரும் கூட. போர்ச்சுகல் அணிக்காக அவர் மொத்தம் 117 கோல்களை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நடப்பு ப்ரீமியர் லீக் சீசனில் எவர்டன் அணிக்கு எதிராக அவர் தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார். ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் இந்த கோலை அவர் பதிவு செய்திருந்தார். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் அவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. வலைக்குள் பந்தை தள்ளி கோல் போட்டு அசத்தினார்.

ஸ்போர்ட்டிங் லிஸ்பன் அணிக்காக 5, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 144, ரியல் மேட்ரிட் அணிக்காக 449 மற்றும் ஜூவான்டஸ் அணிக்காக 101 என மொத்தம் 700 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார்.

“700 கோல்களை பதிவு செய்வது என்பது சுவாரஸ்யமான ஒன்று. அவருக்கு எனது வாழ்த்துகள். நிச்சயம் அவர் வரும் நாட்களில் மேலும் சில கோல்களை பதிவு செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது” என மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்