சமாஜ்வாதி கட்சி நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார்

Date:

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.

முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை வரை சிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். மத்தியில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். அடிப்படையில் முலாயம் சிங் யாதவ் ஓர் ஆசிரியர். மல்யுத்த வீரரும் கூட. படிப்படியாக அரசியலில் இடம்பெற்ற அவர் உ.பி. அரசியலின் முக்கியமான முகமாக உருவெடுத்தார். பாஜகவை ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக எதிர்த்து வந்தவர் முலாயம் சிங் யாதவ்

2012இல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றது. அப்போது அவர் தனது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்து வாரிசு அரசியல் சர்ச்சையில் இணைந்தார். உட்கட்சி பூசல், மகன் உயர்த்திய போர்க்கொடி என பல்வேறு நெருக்கடிகள் ஒருபுறம் வயது முதிர்வு மறுபுறம் என முடங்கிய முலாயம் சிங் யாதவ் கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் சிங் தாமாகவே லைம்லைட் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்