யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் – ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் eது.
பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். இன்றைய அமர்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி.காண்டீபன், நிதியாளர் கே. சுரேஸ்குமார், பதில் நூலகர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விருந்தினர்கள், பட்டம் பெறும் மாணவர்களின் சார்பில் அழைக்கப்பட்ட பெற்றோர் – விருந்தினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் 06 ஆம் திகதி வியாழக்கிழமை மூன்று நாள்களில் எட்டு அமர்வுகளாக இடம்பெற்று வரும் இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.
இன்று மூன்றாம் நாள் இடம்பெறவுள்ள ஏழாவது, எட்டாவது அமர்வுகளில் 432 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
நேரலை இணைப்பு : https://youtu.be/uEFyeobwAD8