25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

சட்டவிரோத ஹம்மர் பற்றி விசாரணை!

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மரைக் கைப்பற்றி அரசாங்க ஏலத்தின் மூலம் இறக்குமதியாளருக்கு மீள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இலங்கை சுங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்று வாகனங்களுடன் ஹம்மர் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த வாகனங்கள் அரச சொத்துக்களாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டு ஹம்மர் வாகனத்தை இறக்குமதி செய்த நபரால் வாங்கப்பட்டது.

ஹம்மர் தொடர்பான ஏல நடைமுறைகள் குறித்த தெளிவான விவரங்களை சுங்கத் திணைக்களத்தினால் வழங்க முடியாததை அடுத்து கவலைகள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த வாகனத்தின் மதிப்பு ரூ. 40 மில்லியன். ரூ.27.5 மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டதாக அவர் கூறினார். இதனால் 33.75% இழப்பு ஏற்பட்டது.

இலங்கையின் சுங்க சட்டத்தின் பிரகாரம், மொத்த பெறுமதியில் 10% க்கு குறையாத விலைக்கு மட்டுமே டெண்டர் சபைக்கு விற்பனை செய்ய அனுமதி உண்டு என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வருவாயை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் நேரத்தில், இந்த பரிவர்த்தனையின் மூலம் மதிப்பிடப்பட்ட தொகையைப் பெறாதது குறித்து ஆராய்வது அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

அறுவடை காலத்தில் பெய்யும் மழையால் அழிவடைந்தது வயல்கள்

Pagetamil

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்!

Pagetamil

Leave a Comment