பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் நான்காம் வருட மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (02) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன 25 வயதான மாணவன் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்துள்ளார்.
விடுதியை விட்டு வெளியேறும் முன் மாணவன் எழுதிய கடிதமும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கம்பஹா கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன், ஞாயிற்றுக்கிழமை (02) விடுதிக்கு வந்து இரவு 8 மணியளவில் வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவன் தனது தாயாருக்கு போன் செய்து தான் வீட்டுக்கு வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிக வேலைப்பளு காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த மாணவன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில், பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர், அவர்களில் இருவர் பொறியியல் பீட மாணவர்கள்.