26.8 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

சிகரெட் ஒன்றின் விலை ரூ.5 அதிகரித்தது!

கோல்லீஃப் மற்றும் பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, Golleaf சிகரெட் ஒன்றின் புதிய விலை 85 ரூபாவாகவும், Benson & Hedges சிகரெட்டின் புதிய விலை 90 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டம் நேற்று (01) முதல் அமுல்படுத்தப்படுவதே சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, நிறுவனத்தின் ஏனைய சிகரெட் தயாரிப்புகளான Captain, Bristol மற்றும் Dunhill போன்றவற்றின் சிகரெட்டின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊர்காவற்துறை விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

Leave a Comment