25.6 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

மின்கட்டண அதிகரிப்பால் 2 இலட்சம் தொழிலாளர்கள் வீதிக்கு வரும் அபாயம்!

மின் கட்டண அதிகரிப்பால் பல நிறுவனங்களை நடத்த முடியாமல், ஏறக்குறைய இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் தொழில் இழக்கும் அபாயம் உள்ளதாக, தொழிலாளர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மின் கட்டண அதிகரிப்பால் வரம்பற்ற நஷ்டம் ஏற்படுவதால் பல நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோவிட் பரவியதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தொழில் இழந்தனர்.

குறிப்பாக சுற்றுலாத்துறையில், ஹோட்டல், உணவகங்கள் மற்றும் ரிசார்ட்டுகள் மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பிரதான இடங்களாகும் என இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரியந்த திலகரத்ன தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் ஏற்கனவே ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், வில்லாக்கள், விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல்களை நடத்துவதற்கான மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்குமாறு இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. சோலார் பேனல் திட்டத்தை அரசு செயல்படுத்தினால், அதற்கான ஓட்டல் மேற்கூரைகளை வழங்க தயாராக உள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் குறைக்கவும் ஏற்கனவே பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதேவேளை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக அதிகளவான தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்லும் போக்கு காணப்படுவதாகவும், 2020ஆம் ஆண்டில் மாத்திரம் 53,711 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாகவும் தொழிலாளர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தி ஆயிரத்து எழுநூற்று தொண்ணூற்று ஐந்தாக அதிகரித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் பேருந்து மோதி ஒருவர் பலி

Pagetamil

அர்ச்சுனாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை!

Pagetamil

இலங்கையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வுநிலை: வடக்கு, கிழக்கில் எங்கெல்லாம் மழை பொழிய வாய்ப்பு?

Pagetamil

அடுத்த 24 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது!

Pagetamil

‘எமது காணியை மோசடி செய்து விட்டார்கள்’: கிளிநொச்சி நபர் பரபரப்பு புகார்

Pagetamil

Leave a Comment