மாகாண சபை முறையை வலுப்படுத்துவதற்காக ஜனநாயக இளைஞர் அமைப்பினர் உள்ளிட்ட இளைஞர் அமைப்புக்கள் பல ஒன்றிணைந்து தயாரித்த சமூகமயப்படுத்தப்பட்ட முன்மொழிவு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு ஜனநாயக இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை கிரீன் ஹோட்டல் வளாகத்தில் நேற்று (24) நடைபெற்றது.
தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருமான மஹிந்த தேசப்பிரிய அவர்களிடம் தெற்கு இளைஞர்கள் தயாரித்த திட்ட முன்மொழிவு உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த திட்ட முன்மொழிவில் மாகாண ஆளுநர், முதலமைச்சரும் அமைச்சரவையும், மாகாண சபை மற்றும் மத்திய அரசு, சட்ட ஏற்பாடு, மாகாண நீதிமன்ற முறைமை, மாகாண நிதி அதிகாரம், மாகாண அரச சேவை, காணி மற்றும் இயற்கை வளங்கள், பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மாகாணசபை முறையை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளாக அதில் முன் வைக்கப்பட்டுள்ளது.
இளைஞர் அமைப்புக்களை பிரதிநிதிப்படுதி 200 பேரளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி திசரு திசாநாயக்க, மாற்று அணியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்மன்பில, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.