26.8 C
Jaffna
December 21, 2024
Pagetamil
மலையகம்

நுவரெலியா மாநகரசபைக்கு வரி செலுத்தாதவர்களிற்கு சிக்கல்!

மாநகர சபையின் எல்லைக்குள்  2020 – 2022 வரை மூன்று வருட காலப்பகுதிக்கு வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள், மாநகர சபையின் பொறுப்பில் எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர ஆணையாளர் நேற்று தெரிவித்தார்.

நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகள், கடைகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள் ஒவ்வொரு காலாண்டும் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டியவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவ்வாறு செலுத்தவில்லை என சபையின் வருமானப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த மூன்று வருட காலப்பகுதியில் நுவரெலியா மாநகரசபைக்கு ரூ.80 மில்லியன் கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.

நுவரெலியா நகரின் பல இடங்களில் வேண்டுமென்றே கட்டணத்தை செலுத்த தவறியவர்களின் சொத்துக்கள் இந்த வாரத்திற்குள் தடைசெய்யப்படும் என சிவப்பு அறிவிப்புகளை காட்சிப்படுத்தியதன் மூலமும் மதிப்பீட்டு வரி செலுத்தாதவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்குவதன் மூலமும். பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் சுஜீவ போதிமான்ன தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள், கோவிட் மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக அந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் மாநகரசபைக்கு கட்டணங்கள் மற்றும் வரிகளை செலுத்த முடியவில்லை என்றனர்.

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை தாம் புரிந்து கொண்டு அந்த சிக்கல்களை எழுத்துமூலம் தமக்கு அறிவித்தால் அனைத்து தரப்புடனும் கலந்துரையாடி அவகாசம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நுவரெலியா மேயரும் நிதிக்குழு தலைவருமான லால் கருணாரத்ன தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Pagetamil

கண்டியில் வாகன விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு

east tamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

Leave a Comment