வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெறத் தேவையில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
2020 மார்ச் மாதத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அமைய உள்வரும் பயணிகள் அல்லது சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளிவிவகார அமைச்சு மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1