எரிபொருள் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை இன்று திருத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (1) திருத்தம் அமுல்படுத்தப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் 2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட விவாதம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், எரிபொருள் விலை திருத்தம் இன்று அமுலுக்கு வரும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்றைய இறக்குமதி விலையுடன் எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்படும் என நம்பவில்லை என விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் காலங்களில் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக இயங்கும் போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தாம் நம்புவதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1