26.2 C
Jaffna
January 3, 2025
Pagetamil
இலங்கை

சஜித்தின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறினார்!

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி நேற்று காலை (26) நாட்டைவிட்டு  வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது இரண்டு குழந்தைகளான சஞ்சய் ஜெயக்கொடி மற்றும் அமயா ஜெயக்கொடி ஆகியோருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 505 இல் நாட்டை விட்டு வெளியேறினார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீயில் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை துலாஞ்சலி ஜெயக்கொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள  வீடு ஜூலை 9ஆம் திகதி வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல பெறுமதியான புத்தகங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

சம்பவத்தின் போது துலாஞ்சலி ஜயகொட இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்

Pagetamil

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

Pagetamil

கிளிநொச்சி விபத்தில் உயிரிழந்த தாய்க்கும் சேய்க்கும் நீதி கோரி போராட்டம்

Pagetamil

பதக்கம் சின்னத்தில் போட்டியிடவிருக்கும் திலித் ஜயவீர

east tamil

தூய்மையான இலங்கைக்கான முயற்சி: பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம்

east tamil

Leave a Comment