நடிகையை மீனாவை காதலித்தீர்களா என்கிற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு 60 வயதாகிறது. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அரசியலே கதியென இருககும் அவர், கட்சியே குடும்பம், உறுப்பினர்களே பிள்ளைகள் என்று இருக்கிறார்.
பேட்டி ஒன்றில், நீங்கள் நடிகை மீனாவை காதலித்தீர்களா என திருமாவளவனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, மீனா நடித்த ஒரேயொரு படத்தை தான் பார்த்திருக்கிறேன். தஞ்சாவூரு மண்ணு எடுத்துனு ஒரு பாட்டு வருமே. அந்த படம் தான் பார்த்தேன் என்றார்.
திருமாவளவன் மீனாவை காதலித்தார் என்று வதந்தியை கிளப்பிவிட்டது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தான் மீனாவை இதுவரை சந்தித்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். மீனாவுடன் காதல் என்பதெல்லாம் வெறும் வதந்தி என திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.
கணவர் சாகரை இழந்தை மீனா தற்போது தான் மெதுவாக தேறி வருகிறார். இன்ஸ்டாகிராமில் தோழிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, புகைப்படங்களை வெளியிடுவதுமாக இருக்கிறார்.