26.1 C
Jaffna
December 22, 2024
Pagetamil
உலகம்

ஈரானிலும் பரவியிலிருந்ததா லிங்க வழிபாடு?: ஆண்குறி வடிவ கல்லறைகள்!

ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள மலைகளில் அமைந்துள்ள பண்டைய கல்லறைகள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திருக்கும் ஒரு பிரதேசமாகும். இந்த பண்டைய கல்லறைகளும், அவற்றின் தோற்றம் காரணமாகவும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அங்குள்ள அனேக கல்லறைகள் ஆண்குறி வடிவத்தில் உள்ளன.

துர்க்மெனிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள காலித் நபி கல்லறையில், சுமார் 600 தனித்தனி நினைவுக்கற்கல் இருந்துள்ளன.

ஈரானின் கடுமையான மதச் சட்டங்கள் மற்றும் பழமைவாத கலாச்சாரம் இருந்தபோதிலும், இந்த நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஆண் அல்லது பெண் பிறப்புறுப்புகளின் தோற்றத்தை ஒத்திருக்கின்றன.

ஈரானின் தொல்லியல்துறையின் துல்லியமின்மை காரணமாக, கல்லறைகள் அமைக்கப்பட்ட துல்லியமான காலப்பகுதி தெரியவரவில்லை.

இந்த கல்லறைகளை சுற்றி புதையல்கள் புதைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள கற்சுவர்களில் பல்வேறு அடையாளங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மத்திய ஆசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த லிங்க வழிபாட்டாளர்கள் இந்த பகுதிக்கும் பரவியிருக்கலாம், அவர்களின் கல்லறைகளாக இவை இருக்கலாம் என சில மானுடவியலாளர்கள் குறிப்பிட்டாலும்,  இந்த கோட்பாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.

அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் இத் தளத்திற்கு, இப்போது ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

இந்த கல்லறையில் 4 ஆம் நூற்றாண்டின் யேமன் கிறிஸ்தவ தீர்க்கதரிசி கலீதின் கல்லறை உள்ளது. அவரது கல்லறைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புனித யாத்திரை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான துர்க்மெனிஸ்தானியர்கள் வருகை தருகின்றனர்.

இருப்பினும், அங்கு பெருமளவு கொள்ளை நடப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையர்கள் கல்லறைகளை தோன்றி புதையல்களை கொள்ளையடிப்பதாகவும், தளத்தில் இருந்து நினைவுப் பொருட்களை எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அருகில் வசிக்கும் உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, சுற்றுலாப்பயணிகள் இல்லாத நாட்களில், குறிப்பிட்ட நபர்கள் உள்ளே புகுந்து கல்லறைகளை சேதப்படுத்துகின்றனர்.

1980 களில் அந்த இடத்தில் சுமார் 600 நினைவுக்கற்கள் இருந்ததாகவும்.தற்போது 200 வரையான நினைவுக்கற்களே எஞ்சியுள்ளன.

இந்த தளம் ஈரானின் கலாச்சார பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் அமைப்பால் பாதுகாக்கப்பட்ட தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

துரோகம் செய்த காதலி கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை: காதலனுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு!

Pagetamil

12 முறை விவாகரத்து செய்து… இணைந்த தம்பதி: 13வது முறை அரசாங்கமே கடுப்பானது!

Pagetamil

Leave a Comment