Pagetamil
சினிமா

ஆஸ்தான மேக்கப் ஆர்டிஸ்டின் வீட்டிற்கு சென்ற கமல்!

ஹாலிவுட் நடிகை மெக்கென்சி கேட் வெஸ்ட்மோர் வீட்டுக்குச் சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

நடிகை மெக்கென்சியின் தந்தை பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோர் ஆவார். இவர் கமல்ஹாசனின் பிரமாண்ட படங்களான இந்தியன், அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியவர். தற்போது இந்தியன் 2 படம் மீண்டும் ஆரம்பிக்க உள்ள நிலையில் தான், மைக்கேல் வெஸ்ட்மோர் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள கமல், மைக்கேல் வெஸ்ட்மோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பை நடிகை மெக்கென்சி தனது வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் கமல்ஹாசன் நடிக்க, ஷங்கர் இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கொரோனா, படத்தின் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் ‘RC15’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே. கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மெகாஹிட் அடித்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் ஷூட்டிங்கிற்கு ஆயத்தமாகிறது படக்குழு. அந்த வகையில், படத்தின் படப்பிடிப்பு ஓகஸ்ட் 22ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் தான், மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துள்ளார் கமல்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

Leave a Comment